Vijaykirthika's profileSRIRANGAPANKAJAMPhotosBlogListsMore ![]() | Help |
|
23 August Q & A (answered by Sri Muralidhara Guruji)1) Despite doing my duties regularly, chanting regularly and having great love towards God why is there some sort of emptiness in the mind. How it can be avoided and how to be ever in the happy state?
Sri Sri Swamiji: If you have great love towards God, you will not feel emptiness. True love to God and emptiness do not go together. If it seems to, then there is something wrong. Check to see which one is missing. 2) In our Hindu temples, there are quite a few sculptures on the tower (‘Gopuram’) depicting erotic postures. Why?
Sri Sri Swamiji: Human mind is easily attracted to sensual stimulus. Hence it is natural for one to look at these sculptures. As he looks at such sculptures on the temple tower, amidst them, he accidentally spots a beautiful sculpture of Lord Krishna. This is a divine message from the Almighty.
Even if he enters the temple, for the sole purpose of looking at such sculptures on temple walls, Lord Krishna residing in the sanctum sees and captures him, and He takes over!
This is perhaps the reason for such depictions
- Rekha!! Love to be with GOD <hrithikasharma@gmail.com>
15 August அமலனாதிபிரான்அமலனாதிபிரான்
தனியன்கள் ஆபாத சூட மநுபூய ஹரிம் சயானம் மத்யே கவேற துஹிதுர் முதிதாந்தராத்மா அத்ரஷ்ட்ருதாம் நயனயோர் விஷயாந்தராணம் யோநிச்சிகாய மணவை முநிவாஹநம் தம்! யாவறொரு திருப்பாணாழ்வார் திருக்கவிரியின் நடுவில் திருக்கண்கள் வளர்ந்து அருளுகின்ற அழகிய மணவாளப் பெருமாளை திருவடி தொடங்கி திருமுடியளவாக கண்குளிர அனுபவித்து மகிழ்ந்த சிந்தையராய் தமது திருக்கண்கள் அப்பெருமானன்றி மற்றொண்டையும் காணமாட்டாமையாய் அறுதியிட்டருளினாரோ அப்படிப்பட்ட லோகசாரங்க மகாமுனியை வகானமாக கொண்ட திருப்பாணாழ்வாரை சிந்திக்ககடவேன்! காட்டவே கண்டபாத கமல நல்லாடையுடுத்தி தேட்டருமுதரபந்த திருமார்வு கண்டஞ்செவ்வாய் வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபுகுந்து பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே! லோகசாரங்க முனியின் தோளின் மேல் ஏறி தனியே உள்ளே புகுந்து அம்முனிவர் காண்பித்த படியே கண்டு சேவிக்க பட்ட திருவடித் தாமரைகளும் விலக்ஷணமான பீதாம்பரமும் திருநபியும் கிடைத்ததற்கு அரிதான பொன் அரைஞாணும் பிராட்டி வாழ்கின்ற மார்பும் திருக்கழுத்தும் சிவந்த வாயும் சோர்வு இல்லாத திருக்கண்களும் ஆகிய இவற்றோடும் கூடிய திருமேனியை பாசுரங்களின் அனுசந்தானத்தோடு கூட சேவித்தே ஆனந்தித்த திருப்பாணாழ்வார் உடைய திருவடியை துதிக்கப் பெற்றோம்!!
அமலனாதிபிரான் அமலனாதிபிரான் அடியார்க்கன்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர்கோன் விரையார்பொழில்வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதிவானவன் நீண்மதிளரங்கத்தம்மன் திருக் கமலபாதம்வந்து என் கண்ணினுள்ளந வொக்கின்றதே இப்பாசுரத்தின் உரை ! பரிசுத்தனாய், ஜகத்காரபூதனாய், உபகாரகனாய், இழிகுலத்தவனான என்னை தனது அடியவர்களான பாகவதர்களுக்கு ஆட்படுத்துகையாலே வந்த சிறந்த புகழையுடையனாய் நித்ய சூரிகளுக்கு தலைவனாய் இருந்து வைத்து பரிமளம் மிக்க சோலைகளை உடைய திருவேங்கட மலையில் வந்து தங்குமவனாய் ஆஷ்ரயிப்பார்க்கு அறியனாயிருக்கை ஆகிற குற்றம் அற்று பாரதந்த்ரியத்தை வெளியிட்டு நிற்க்குமவனாய் அடியாருடைய குற்றத்தை காங்கையாகின்ற தோஷமில்லாத வத்சலனாய் சேஷ சேஷி முறை வழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரபதத்துக்கு நிர்வஹகனாய் உயர்ந்த மதில்களை உடைய கோயிலிலே ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய தாமரைத் திருவடிகள் தானாகவே என் கண்களினுள் வந்து புகுகின்றனவே!! உவந்தவுள்ளத்தனாய் உலகமலந்தண்டமுற நிவந்தநீண்முடியன் அன்றுநேர்ந்த நிசாசரரை கவர்ந்த வேங்கனைக் காகுத்தன் கடியார்போழில் அரங்கத்தம்மான் அரைச் சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே! மகிழ்ச்சியோடு கூடிய மனத்தையுடையனாய் கொண்டு மூவுலங்களையும் அளந்து அண்டகடாஹத்து அளவும் சென்று முட்டும்படி உயர்த்தியை அடைந்த பெரிய திருமுடியை உடையவனாய் முற்காலத்தில் எதிர்த்து வந்து ராக்ஷசர்களை உயிர்வாங்கின கொடிய அம்புகளையுடைய இராமபிரானாய் மணமிக்க சோலைகளையுடைய ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான எம்பிரானுடைய திருவரையில் சாத்திய பீதாம்பரத்தின் மேல் என்னுடைய நினைவானது பதிந்ததாம்! மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான் அந்திபோல்நிறத்தாடையும் அதன்மேலயனைப் படைத் தேரோழில் உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தினுயிரே! ! குரங்குகளானவை ஒருகிளையில் நின்றும் மற்றொரு கிளையில் பாயப் பெற்ற வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே நித்யசூரிகள் பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய், கோயிலிலே திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையை உடையனான அழகிய மணவாளனுடைய செவ்வானம்போன்ற நிறத்தையுடைய திருப்பீதாம்பரமும் அப்பீதாம்பரத்தின் மேலே பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகையுடைய திருநாபிக்கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ என்னுடைய மனதிலே விளங்குகின்ற இனிதான ஆத்ம ஸ்வரூபம் சதுர மாமதிள் சூழிலங்கைக்கிறைவன் தலைபத்து
உதிரவோட்டி ஒர்வெங்கணையுத்தவன் ஓதவண்ணன் மதுரமாவண்டு பாட மாமயிலாடரங்கத்தம்மான் திருவயிற் றுதரப்பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே! நாற் சதுரமாய் உயர்ந்திருக்கின்ற மதிள்களாலே சூழப்பட்ட இலங்கை நகரத்திற்கு நாதனான இராவணனை முதல்நாள் யுத்தத்திலே தோற்று ஓடும்படி செய்து மறுநாள் போரில் அவனது தலைப்பத்தும் பனங்காய் போல் உதிரும் படி ஒப்பற்ற கூர்மையான பாணத்தை ப்ரயோகித்தவனுமான கடல்போன்ற குளிர்மை வடிவையுடையவனும் வண்டுகளானவை மதுரமாக இசைபாட அதற்குத் தகுதியாக சிறந்த கூத்தாடப் பெற்ற திருவரங்கத்தில் எழுந்து அருளியிருக்கும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவயிற்றில் சாத்தியுள்ள 'உதரபந்தம்' என்னும் ஆபரணமானது என் நெஞ்சினுள் நிலைத்து நின்று உலாவுகின்றது! பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றி என்னுள்புகுந்தான் கோரமாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான்திரு வாரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே பொறுக்க முடியாதசுமையாய இல்லாமல் நின்ற அனாதியான பாபங்களின்சம்பந்தத்தை தொலைத்து அதனால் பாபங்களின் நீங்கப்பெற்றஅடியேனை தன்னிடத்தில் அன்பு உடையவனாகபண்ணிவைத்தான் ரங்கனாதான்; இப்படி செய்துவைத்ததுமல்லாமல் என் ஹ்ருதயத்திலும் பிரவேசித்துவிட்டான் இப்படிப்பட்ட பாக்கியத்தை பெறுதற்கு உறுப்பாகநான் உக்ரமான பெரியதொரு தவத்தை முற்பிறவியில்செய்திருப்பேனோ என்னவோ?அறிகிறேனில்லை; ஸ்ரீரங்கனதனுடைய பிராட்டியையும் முக்தா ஹாரத்தையும்உடையதான அத்திருமார்பு அன்றோ தாஸனான என்னைஅடிமைப்படுத்திக் கொண்டது!! துண்டவெண்பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேயவப்பன் அண்டரண்டபகிரண்டத்து ஒருமா நிலமெழுமால்வரை உண்டகண்டங்கண்டீர் அடியேனை உய்யக்கொண்டதே! ஒரு துண்டாய் இருக்கிற கலா மாத்ரமான வெளுத்த சந்திரனை முடியிலே உடையனான சிவனுடைய பிச்சை எடுத்துத் திரிந்த பாதகத்தைப் போக்கினவனும் அழகிய சிறகையும் வண்டுகள் வாழ்வதற்கு இடமான சோலைகள் சூழப் பெற்ற திரு அரங்கப் பெருநகரிலே பொருந்தி இல்லாமல் நின்ற ஸ்வாமியான ஸ்ரீ ரங்கனாதனுடைய அண்டத்துக்கு உட்பட்ட தேவாதி வர்க்கங்களையும் அண்டங்களையும் அண்டாவரணங்களையும் ஒப்பற்ற மஹாப்ருத்வியையும் ஏழு குல பர்வதங்களையும் சொல்லிச் சொல்லாத மற்ற எல்லாவற்றையும் அமுதுசெய்த திருக்கழுத்துக்கிடீர் தாஸனான என்னை உஜ்ஜீவிப்பித்தது!
கையினார் சுரிசங்கனலாழியர் நீள்வரை போல்
மெய்யனார் துளபவிரையார் கமழ் நீண்டி முடியெம் அய்யனார் அணியரங்கனார் அரவினணைமிசை மேயமாயனார் செய்பவாய் ஐயோ! என்னைச் சிந்தை கவர்ந்ததே! திருக்கைகளிலே பொருந்தி இருக்கின்ற சுரியையுடைய திருசங்கையும், தீ வீசுகின்ற திருவாழியை உடையராய் பெரியதொரு மலை போன்ற திருமேனியை உடையராய் திருத்துழாயின் பரிமளம் மிகப் பெற்று அதனால் பரிமளியா நின்ற உயர்ந்த திருவபிஷேகத்தை உடைய எமக்கு ஸ்வாமியாய் அழகு பொருந்திய திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருளுபவராய் திருவனந்தாழ்வானின் இனிய திருப்பள்ளியின் மீது பொருந்திய ஆச்சர்ய செய்கைகளை உடைய ஸ்ரீ ரங்கனாதருடைய சிவந்த திருப்பவளமானது என்னுடைய நெஞ்சைகே கொள்ளைக் கொண்டது ஆனந்தாதிசைய குறிப்பு
பரியனாகி வந்த அவுணனுடல் கீண்ட அமரர்க்
கரியவாதிபிரான் அரங்கத்தமலன் முகத்து கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோட்டி நீண்டவப் பெரியவாயக் கண்கள் என்னைப் பேதைமைய்தனவே! மிகவும் ஸ்தூலமான வடிவை உடையனாய்க் கொண்டு பிரகலாதனை நலிய வந்த அசுரனான இரணியனுடைய சரீரத்தை கிழித்து பொகட்டவனும் பிரமன் முதலிய தேவர்கட்க்கும் அணுகமுடியாதவனும் ஜகத்காரணபூதனும் மஹோ பகாரகனும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற பரம பாவனனுமான எம்பெருமானுடைய திருமுக மண்டலத்தில் கருத்த நிறமுடைய விசாலங்கலாய் பிரகாசமுடையவையாய் செவ்வரி படர்ந்து இருப்பனவாய் காது வரை நீண்டிருப்பனவாய் பெருமை பொருந்தியவையுமான அந்தத் திருக்கண்கலானவை அடியேனை உந்மத்தனாகச் செய்து விட்டன!! ஆலமாமரத்தின் இலை மேல் ஒருபாலகனாய்
ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவினணையான் கோலமாமணியாரமும் முத்துதாமும் முடிவில்லதோரெழில் நீலமேனி ஐயோ! நிறைகொண்டது என் நெஞ்சினையே! ஆலமரத்தினுடைய சிறிய இலையிலே ஒரு சிறு பிள்ளையாகி ஏழு லோகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும் கோயிலிலே திரு ஆனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்து அருள்பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய அழகிய சிறந்த ரத்னங்களில் செய்யப்பட்ட ஹாரமும் முத்து வடமும் ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திரு ஆபரணங்கள் எல்லைகாண முடியாமல் அபரிமிதமான விளங்கா நிற்கப் பெற்றதும் ஒப்பற்ற அழகையுடையதும் கருநெய்தல் மலர் போன்றதுமான திருமேனியானது எனது நெஞ்சினுடைய அடக்கத்தை கொள்ளைகொண்டு போயிற்று! ஐயோ! இதற்க்கு என்ன செய்வேன்
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர்கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!!!!! காளமேகம் போன்ற வடிவை உடையவனும் கோபாலக் குமாரனாக பிறந்து வெண்ணையை அமுது செய்த திருவாயை உடையவனும் என்னுடைய நெஞ்சைக் கொள்ளைக் கொண்டவனும் நித்ய சூரிகட்க்கு தலைவனும் பூமண்டலத்துக்கு அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்திருப்பவனும் எனக்குப் பரம போக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை சேவிக்கப் பெற்ற எனது கண்களானவை பரமபத நாதனையும் காணமாட்டா!!! அமலனாதிபிரான் உரை முற்றிற்று! |
|
|